பக்கம்:இசைத்தமிழ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 களைப் பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என மூன்ருகப் பகுத்துரைப்பர். 'வண்ணம், ஒருவகை யான் மூன்று வகைப்படும். பெருவண்ணம், இடைவண் ணம், வனப்பு வண்ணம் என, அவற்றுள் பெருவண்ணம், ஆருய் வரும்; இடைவண்ணம், இருபத்தொன்ருய் வரும்; வனப்பு வண்ணம், நாற்பத்தொன்ருய் வரும், என அடி யார்க்கு நல்லார் கூறுதலால் இசை நூலார் கூறும் வண் ணம் முன்ருதல் புலளும். 'எண்ணிய நூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப் பென்னும் வண்ண விசை கையெல்லாம்" (ஆயைர்-28) எனச் சேக்கிழார் அடிகள் இம்மூவகை வண்ணங்களையும் முறையே குறிப்பிட்டுள்ளார். "வண்ணமூன்றுந் தமிழிற் றெரிந்திசை பாடுவார் வீண்ணுமண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே'(2 75.1.1, எனவரும் ஆளுடைய பிள்.ண்யார் தேவாரத்துள் இசைத் தமிழ் நூலார் எண்ணிய வண்ண இசை வகை மூன்று என்று குறிக்கப் பெற்றிருத்தல் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும் ஆற்றுவரி. கானல்வரி, என்பன முன்னர் விளக்கப்பெற்றன. விரிமுரண் என்பது சிலப்பதிகாரம் கானல்வரியில் வரும் முரிவரி என்னும் இசைப்பாட்டாதல் கூடும் முரிவளியாவது முன்னே தொடங்கப் பெற்ற இய லமைதியாகிய யாப்பும் இசையமைதியாகிய பண்ணிர்மையும் பாட்டின் இடையிலே முரிந்து மாறும் வண்ணம் இயற்றப் பெறும் இசைப்பாட்டாகும். "எடுத்த இயலும் இசையுந்தம்மின் முரித்துப் பாடுதல் முரியெனப்படுமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/183&oldid=745037" இலிருந்து மீள்விக்கப்பட்டது