பக்கம்:இசைத்தமிழ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#74 என அரும்பதவுரையாசிரியார் காட்டிய மேற்கோட் சூத்திரம் மேற்குறித்த முரிவரியின் அமைப்பினை விளக்குவதாகும். வரிமுரிபாடி என்றும் வல்ல வாறடைந்து நெஞ்சே என வரும் அப்பர் தேவாரத்தில் இவ்விசைப்பாட்டுக் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். "மாதர் மடப்பிடியும் மட அன்னமு மன்னதொர் தடையுடைம் மலைமகள் துணயென மகிழ்வர்” எனத் திருஞானசம்பந்தர் பாடியருளிய யாழ்முரித் திருப் பதிகம், முன்தொடங்கிய இயலமைதியாகிய யாப்பும் இசையமைதியாகிய பண்ணிர்மையும் இடையிடையே முரிந்துமாறும் அடிகளால் இயன்ற இசைப்பாவாதலின் இதனை முரிவரிக்கு உரிய சிறந்த இலக்கியமாகக் கொள் ளுதல் பொருந்தும். இனி, மண்டிலம் என்பது, பாடலில் முதலும் முடிவும் இயைத்து நோக்கும் வண்ணம் ஒரே பொருட்டொடர்பு உடையதாய் நாற்சீரடியொத்துவரும் இசைப்பாட்டாகும் 'நாற்சீரடி யொத்துவருவன மண்டிலயாப்பெனப்படும் (தொல், செய், 115) என வரும் பேராசிரியருரைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும். இனி, சிந்து என்பது, அடியிரண்டாய்த் தம்மில் அள வொத்து வரும் செய்யுள் என்பர் வீரசோழிய நூலார். இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வரும் இசைப் பாடல்களைப் பிற்காலத்தார் கண்ணி என வழங்குவர். தாயுமாளுர் திருப்பாடல்களிலமைந்த பராபரக் கண்ணி பைங்கிளிக்கண்ணி முதலியன இவ்வகையில் அமைந்தன வாகும். 'சங்கர சங்கர சம்பு-சிவசங்கர சங்கர சங்கர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/184&oldid=745038" இலிருந்து மீள்விக்கப்பட்டது