பக்கம்:இசைத்தமிழ்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 75 சம்பு" என முச்சீரடியாகிய சிந்தடியும் தனிச்சொல்லும் நாற் சீரடியுமாகித் தொடர்ந்து வரும் இசைப்பாடல் அமைப் பினைச் சிந்து என வழங்குதல் பொருத்தமுடையதாகும். பிற்காலத்தில் தோன்றிய நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து முதலிய இசைப்பாடல்கள் முச்சீரடியாகிய சிந்தடி யும் தனிச்சொல்லும் விரவப் பெற்றுச் சிந்து என்னும் காரணப்பெயர்க்கு உரியனவாய் வழங்குத்ல் இங்கு நினைக்க்த்தகுவதாகும். திரிபதை என்பது, மூன்றடியாய்த் தம்மில் அலி வொத்துவரும் இசைப்பாட்டாகும். இதனைத் திரிபாதி என வழங்குவர் வீரசோழிய ஆசிரியர். சவலை என்பது முதலடி, கடையடி, இடையடிகள் குறைந்தும் மிக்கும் வரும் பாடலாகும். நான்கடிகளும் அளவொத்துவரும் பாடல் சமபாதம் எனப்படும். மேற்குறித்த சிந்து, திரிபதை, சவலே, சமபா தவிருத்தம் என்பன பிற்காலத்தார் வகுத்து ரைத்த இயல் பற்றிய யாப்பு விகற்பங்களாகும். இவை யாவும் தொல்காப்பியச் செய்யுளியலின்படி யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சவொரு போகினுள்ளும் பண்ணைத் தோற்றுவிக்கும் இசைப்பாடல்களாகிய பண் ணத்தி என்னும் பகுப்பினும் அடங்குவனவாகும். பண்ணத்தி என்பது இசை நூலிற் கூறப்படும் பாவினம் எனவும் பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி என்ருர் அவை யாவன சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத் தமிழில் ஒதப்படுவன” எனவும் வரும் இளம்பூரணர் உரையினைக் கூர்ந்து நோக்குங்கால் தாழிசை துறை விருத்தம் என வழங்கும் பாவினங்கள் யாவும் இசைத் தமிழ் நூலார் அமைத்துக் கொண்ட இசைப்பாட்டின் வகைகளாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/185&oldid=745039" இலிருந்து மீள்விக்கப்பட்டது