பக்கம்:இசைத்தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 முன்னையோர் வகுத்த திணைநிலைவரி, மயங்குதிணைவரி, என்னும் இசைப்பாடல் வகையுள் அடங்குவனவாகும். பண் னின் உருவங்களே உள்ளவாறு புலப்படுத்தும் இலக்கண இசைப்பாடல்களும் முன்னைத் தமிழ்ச் சான்ருேர்களாற் பாடப்பெற்றுள்ளன. 'கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணே என்று மேத்தித் தொழுவோம் யாமே? என ஒளவையார் பாடிய பாடல் பாலையாழ் என்னும் பண் ணுக்கு இலக்கணப் பாட்டாகி வருதலிற் பண்ணத்தி யாயிற்று என்ருர் இளம்பூரணர். இவ்வாறே அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் நால்வகைப் பண்களுக்கும் இலக்கணப் பாட்டாகி வந்த பாடல்களே எடுத்துக்காட்டி அப்பாடல் களுக்கு அமைந்த சுருதியளவுகளையும் வேனிற் காதை யுரையில் அரும்பதவுரையாசிரியர் குறிப்பிட்டு விளக்கி யுள்ளார். இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் கடைச் சங்ககால முதல் அருணகிரிநாதர் வாழ்ந்த கி. பி. 15-ம் நூற்ருண்டு வரை தமிழ்மொழியில் இயற்றப் பெற்றுள்ள இசைப்பாடல்களின் இலக்கண மரபு ஒருவாறு புலனுதல் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/189&oldid=745043" இலிருந்து மீள்விக்கப்பட்டது