பக்கம்:இசைத்தமிழ்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசைத்தமிழ்ப்பயன் இயற்றமிழ்ச் சொற்பொருள் நலங்களும் இசைத் தமிழ் ஒலிநயமும் சிதையாவகை ஒன்றிப் பொருந்தும் முறை யில் அமைந்த இனிய இயலிசைத் தமிழ்ப்பாடல்களே வாரப் பாடல்களாம் என்பதும், முழுமுதற் கடவுளாகிய தெய்வத் தைப் பரவிப் போற்றும் முறையில் மூவர் முதலிகள் அருளிய திருப்பதிகங்கள் இங்ங்னம் இயலிசை நலம் வாய்ந்த வாரப் பாடல்களாக அமைந்தமை பற்றித் தேவாரம் என வழங்கப்பெற்றன என்பதும் நன்கு துணியப்படும். செவிப் புலனுக்கு இன்பந் தந்து உணர்வூட்டும் நாதத்தை ஓசை' எனவும் அவ்வுணர்வுடன் நற்பொருளை அறிவுறுத்தும் முறையில் மக்களது உள்ளத்திற் பதியும் செவிப்புலனும் அணுத்திரளே ஒலி எனவும் பகுத்துணர்த் துவர் அறிஞர். உயிர்க்குயிராய் விளங்கும் இறைவன், மேற்குறித்த ஓசை ஒலி ஆகிய இருவகை ஒலி நுட்பங் களாகவும் பிரிப்பின்றி இயைந்துநின்று உலகங்கள் எல்லா வற்றையும் இயக்கி வருள்கின்ருன் என்பர் பெரியோர். இவ்வுண்மையினை, 'ஒசை யொலியெலாம் ஆளுய் நீயே உலகுக் கொருவணுய் நின்ருய் நீயே எனவரும் திருத்தாண்டகம் இனிது புலப்படுத்துவதாகும். அருளாளனுகிய இறைவன் மன்னுயிர்களின் உள்ளத்தை யுருக்கி இன்ப அன்பினைப் பெருக்கும் முறையில் இனிய இசையுருவாக விளங்கி நலந்தருகின்ருன் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/190&oldid=745045" இலிருந்து மீள்விக்கப்பட்டது