பக்கம்:இசைத்தமிழ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{81 இங்ங்ணம் இசையுருவாய் விளங்கும் சிவபரம் பொருளைப் போற்றி வழிபாடு செய்தற்கு ஏற்புடையதாய இசைத் திறத்திற் சிறந்து விளங்கும் மொழி தமிழ் என்றும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் பண்ணுர் இன் தமிழாகவும் பாட்டகத்து இசையாகவும் விளங்கி உள்ளத் திற்கு உவகையளிக்கின்ருன் என்றும், பாட்டிற் பண்ணுக இசைந்த அப்பரமன், தன்னை இன்னிசைச் செழும்பாடல் களாற் பரவிப் போற்றும் மெய்யடியார்களுக்குத் தானே எளிவந்து முன்நின்று இன்னருள் வழங்குகின்ருன் என்றும் தேவார ஆசிரியர்கள் தாம் அருளிச் செய்த திருப்பதிகங் களிற் பலவிடங்களிலும் குறித்துப் போற்றியுள்ளார்கள். இயல் இசை நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளம் பெற்று வளர்ந்த தமிழ் மொழியானது, பழத்தினிற் சுவையும் கண்ணிடை மணியும் போன்று இசை வளர்ச் சிக்கு இன்றியமையாததாய்ப் பண்ணிடையே கலந்து நின்று இசைக்குச் சுவையும் ஒளியும் தரவல்லதாகும். இந்நுட்பம், 'பண்ணினர் பாடலாகிப் பழத்தினில் இரதமாகிக் கண்ணினர் பார்வையாகி’ (4-70-4) எனத் திருநாவுக்கரசரும், 'பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய்” (?-29-6) என நம்பியாருரரும் இறைவனை உவமித்துப் போற்றுதலால் இனிது விளங்கும். ஞானத்திரளாய் நின்ற பெருமான் பண்ணுகவும் பண்ணகத்தே இனிய ஓசையினையுடைய தமிழின் உருவாகவும் திகழ்கின்ருன் என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/191&oldid=745046" இலிருந்து மீள்விக்கப்பட்டது