பக்கம்:இசைத்தமிழ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 'யாழின் பாட்டையுகந்த அடிகளே’ (5–41–3) 'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்தான்’ (6–8–5) என நாவுக்கரசரும் அருளிய திருப்பாடல்கள், பத்தராய்ப் பாடுவார் எல்லார்க்கும் இறைவன் எளிவந்து அருளுந் திறத்தை இனிது புலப்படுத்துதல் அறிந்து மகிழத்தக்க தாகும். வெண்ணெய் நல்லூர்ப்பெருமான், நம்பியாருராகிய சுந்தராது திருமணத்தின்போது முதுவேதியர் கோலத்துடன் வந்து ஆருரனே, எனக்கு உன் குடிமுழுதும் அடிமை' எனக்கூறி அதற்குச்சான்ருக எழுதுந் தமிழ்ப்பழ ஆவணங் காட்டி ஆரூரரை அடிமை கொண்டருளி அவரை நோக்கி, ‘'நீ நம்முடன் வன்மொழிகளைப் பேசினை ஆதலால் வன் ருெண்டன் என்ற பெயரைப் பெற்ருய். நமக்கு அன்பிற்ை செய்யத்தக்க வழிபாட்டிற்குரிய மந்திரம் இசைநலம் வாய்ந்த இனிய தமிழ்ப் பாடலேயாகும். ஆதலால் இந் நிலவுலகில் இயலிசைத் தமிழ்ப்பாடல்களால் நம்மைப் பாடிப்போற்றுவாயாக" எனப் பணித்தருளினர் என்பது வரலாறு. இந்நிகழ்ச்சி, 'மற்று நீ வன்மைபேசி வன்றெண்ட னென்னும் நாமம் பெற்றனே நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனே பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்ருர் தூமறை பாடும் வாயார் (தடுத்-70) எனத் திருத்தொண்டர் புராணத்தில் தெளிவாகக் குறிக் கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/194&oldid=745049" இலிருந்து மீள்விக்கப்பட்டது