பக்கம்:இசைத்தமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 களைப் பாடி இறைவனை வழிபட்டு மகிழ்ந்தார்கள். இச் செய்தி, 'கோழைமிடருக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால் ஏழையடியாரவர்கள் பாவைசொன சொன்மகிழும் ஈசன்’ (3–71–1) எனவரும் திருப்பாடலால் இனிது புலஞகும். பண்டை நாளில் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் தெய்வப் பாடல்களை இசையுடன் பாடுவோரும் யாழில் இசைப்போரும் ஆகிய இசைலாணர்கள், அழுக்கேருத தூய உடையும் நோயின்றித் தூய்மை வாய்ந்த உடல் வனப்பும் மாசற்ற தூய நன்னெஞ்சும் உடையராய் விளங் கினர் என்பதனை, 'புகைமுகந் தன்ன மாசில் துவுடை முகைவா யவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின் நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்ன ரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக் குந் திதலேயர் இன்னகைப் பருமந்தாங்கிய பணிந்தேத் தல் குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க’ (திருமுருகு 138-1471 எனவரும் தொடர்களால் சங்கப் புலவராகிய நக்கீரர் விரித்துக் கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/199&oldid=745054" இலிருந்து மீள்விக்கப்பட்டது