பக்கம்:இசைத்தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 போற்றிப் பாடிய திருப்புகழ்ப் பாக்கள் சந்த இசையிலே சிறந்த வையாய் உள்ளத்தைக் கவரக்கூடியவை. தெய்வத்தைப் போற்றிய இசைப்பாடலை வாரம் என்ற பெயரால் இளங்கோவடிகள் வழங்கியுள்ளார். இயற்றமி ழுக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாகிய செய்யுளியக்கம் நான்காகும். அவை முதனடை, வாரம், கூடை, திரள் என்பன. மிகவும் தாழ்ந்த செலவினை உடையது முதனடை. மிகவும் முடுகிய நடையினை உடையது திரள். இவ்விரண் டிற்கும் இடைப்பட்டதாய்ச் சொல்லொழுக்கமும், இசை யொழுக்கமும் உடையது வாரப் பாடல். சொற்செறிவும் இசைச்செறிவும் உடையது கூடைப்பாடல். இந்நான் கினுள் இழுமென ஒழுகிய இன்னேசையும் செம்பாகமாகப் பொருளுணர்ந்தும் தெளிவும் அமைந்தது வாரப்பாடலே யாகும். இயலிசைத்துறையில் வல்லவர்களே இவ்வார இசையினைப் பாட வல்லவராவர். இத்திறமையில்லாதார் அமைக்குமிசை சிதைவுடையதென்பதைத் தொல்காப்பிய ஞர் குறித்துள்ளார். (தொல். மரபு) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், ஆகிய மூவரும் இறைவனது திருவருளே இன்சொற்படுத்தியும் இன்னிசைப்படுத்தியும் பாடிய செழும்பாடல்களே தேவாரம் என்ற பெயராற் போற்றப்படுகின்றன. இத்தேவாரத் திருப்பதிகங்களும் இவறறின் பண் அமைதியும் இடைக் காலத்தில் போற்றுவாரின்றி அருகி மறையும் நிலையிலே நம்பியாண்டார் நம்பிகள் ஆதரவு கொண்டு திருமுறை களைத் தொகுத்தவனகிய திருமுறை கண்ட சோழமன்னன் திருவெருக்கத்தம்புலியூரில் நீலகண்ட யாழ்ப்பாணர் மரபில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/21&oldid=745066" இலிருந்து மீள்விக்கப்பட்டது