பக்கம்:இசைத்தமிழ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

发QQ மன்றத்தில் தமிழிசைக் கல்லூரி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழிசைச் சங்கத்தின் வளர்ச்சிக்கு அரசரவர்களோடு ஒத்துழைத்த தமிழ்ப்பேரறிஞர்கள் பலராவர். சென்னைத் தமிழிசைச் சங்க ஆண்டு விழாவில் தேவாரப் பண்ணுராய்ச்சிக்கென முதல் நான்கு நாட்கள் வரையறுக்கப்பெற்றுப் பண்ணுராய்ச்சிக் கூட்டம் ஆண்டு தோறும் தொடர்ந்துநிகழ்ந்துவருகின்றது. பண்ணுசாய்ச்சிக் கூட்டத்திற்கு இசையுலகில் புகழ்பெற்ற அறிஞர்கள் தலைமை தாங்குவதும் அவர்களுக்கு இசைப்பேரறிஞர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிப்பதும் இச்சங்கத்தின் மரபாக அமைந்துள்ளமை பலரும் அறிந்த செய்தியாகும். தேவாரப் பண்ணுராய்ச்சிக் கூட்டத்தில் இசை மரபறிந்த தேவார ஒதுவார்களும், கருநாடக சங்கீத வித்துவான்களும், இயற்றமிழ்ப் புலவர்களும், இயலிசை அறிஞர் பலரும், செந்தமிழ்ப் பேரன்பர்களும் பெருவிருப் புடன் கலந்துகொண்டு தங்கள் தங்கள் ஆராய்ச்சியிற் கண்ட கருத்துக்களைத் திறம்பட எடுத்துரைத்துப் பண்ணு ராய்ச்சிக்குத் துணைபுரிந்து வருவது தமிழ் மக்களால் பாராட்டுதற்குரிய நல்லிசைப் பணியாகும். அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தந்தையும் பெருங் கொடை வள்ளலுமாகிய செட்டிநாட்டரசர் அண்ணுமலைச் செட்டியாரவர்களைப் போலவே அவர்தம் திருமகளுரும் அண்ணுமலைப் பல்கலைக்கழக இணை வேந்தருமாகிய டாக்டர் ராஜாசர் மு. அ. முத்தையா செட்டியாரவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/210&oldid=745067" இலிருந்து மீள்விக்கப்பட்டது