பக்கம்:இசைத்தமிழ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இசைத் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் ஆயிரம் யாண்டுகளாக மறைந்துகிடந்த பழந் தமிழ் இசைச் செல்வத்தைத் தமிழ் மக்கள் மீட்டும் பெறுதற்கு உதவிபுரியும் நோக்கத்துடன் அருள்மிகு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பதின்ைகாண்டுகள் அரிதின் ஆராய்ந்து யாழ்நூல் என்னும் இசைத்தமிழாராய்ச்சி நூலின இயற்றி ஞர்கள். இந்நூல் சர்வசித்து வைகாசி 22 (5-6-1947) ஆளுடைய பிள்ளையார் திருநாளிலே சோழநாட்டுத் திருக் காள்ளம் பூதூரில் முத்தமிழ் விரகராகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் முன்னிலையிற் கூடிய புலவர் பேரவையிலே சிறப்பாக அரங்கேறியது. திருக்கொள்ளம்பூதூர்த் திருப்பணிச் செல்வரும் செந் தமிழ்ப் பேரன்பரும் ஆகிய நச்சாந்துப்பட்டி உயர் திருவாளர் பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியாரவர்களது பொருளுதவியுடன் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்பெற்ற யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் ஆராய்ச்சி நூலானது, தமிழ் மக்களது விழிப்பின்மையால் வழக்கற்று மறைந்த பழந் தமிழ் இசைமரபினை மீட்டும் உருவாக்கி வளர்க்கும் இசைத் தமிழ்க் கருவூலமாகத் திகழ்கின்றது. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் யாழாசிரியனது இலக்கணங்கூறும் இருபத்தைந்தடிகளுக்கு இயைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/212&oldid=745069" இலிருந்து மீள்விக்கப்பட்டது