பக்கம்:இசைத்தமிழ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 தொரு விரிவுரையாக எழுந்த இந்நூல், இளங்கோவடிகள் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற் பொதிந்து வைத்துள்ள இசை நூற்பொருளைத் தெளிவாக விளக்கு கின்றது. பல நூற்ருண்டுகளாக வழக்கொழிந்துபோன பழந்தமிழ் இசையிலக்கணத்தை வரலாற்று நெறியில் ஆராய்ந்து விளக்கும் நிலையில் அமைந்த இந்நூல், பண்டை நாளில் தமிழ் முன்னேர் கண்டுணர்த்திய நூற்று மூன்று தமிழ்ப்பண்களின் உருவங்களையும் அப்பண்கள் தோன்று தற்கு நிலைக்களமாகிய ஏழ்பெரும்பாலை ஐஞ்சிறுபாலையாகிய பன்னிரு பாலைகளின் அமைப்பினையும் தந்து அவற்றை இக் காலத்தில் வீணை முதலிய கருவிகளில் வைத்து வாசித்தற்கு வேண்டிய அலகு நிலைகளையும் குறிப்பிட்டுப் பழந்தமிழிசை மரபிற்குப் புத்துயிரளிக்கின்றது. தமிழ்முன்னேர் கொண்ட இருபத்திரண்டு இசையலகுகள் (சுருதிகள்) இவையெனத் தெளிவுபடுத்தியும் இருபத்துமுன்ருவதாக நின்ற பிரமாண சுருதியெனப்படும் விதியிசையின் அளவினையும் அஃது அளயிற்சிறிதாயினும் எண்ணிக்கையில் ஈரலகு பெறுவது என்னும் நுட்பத்தினையும் நன்கு விளக்கும் முறையில் யாழ் நூலாசிரியர் அமைத்துதவிய சுருதி வீணை என்னும் கருவி பழந் தமிழ் இசையுருவங்களையும் வடநாட்டிலும் தென்னுட்டி லும் பிற்காலத்தில் தோன்றிய இசையுருவங்களையும் ஒருங்கு வாசித்தற்கேற்ற அமைப்பினையுடையதாகும். இக்காலத்தில் கருநாடக சங்கீதமென வழங்கும் தென்னுட்டிசையில் எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களை வகுத்து முறைப்படுத்தியவர் வேங்கடமகியாவார். அவர் வகுத்துள்ள எழுபத்திரண்டு ராகங்களைக் குறித்து இசை யாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/213&oldid=745070" இலிருந்து மீள்விக்கப்பட்டது