பக்கம்:இசைத்தமிழ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 இவ்வாறு இசையாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறும் கணக்கு முறைகளையும் குழல் யாழ் விண் முதலிய இசைக்கருவிகளைச் செய்து பயன்படுத்தும் முறை களையும் விளக்கும் யாழ்நூலானது, இசையிலக்கண நூலாக மட்டுமன்றிச் செய்முறை இசைத்தமிழ் நூலாகவும் அமைந் துள்ளமை குறிப்பிடத்தகுவதாகும் தமிழிசை வளர்ச்சியில் ஆர்வமுள்ள இயலிசைப் புலவர்களும் மாணவர்களும் யாழ் நூலினை நன்குயின்று இசைத்தமிழ் வளம்பெற இடை விடாது உழைத்தல்வேண்டும். தமிழிசையில் ஆர்வமுள்ள செந்தமிழ்ச் செல்வர்களும் பேரறிஞர்களும் பழைய தமிழிசைக் கருவியாகிய யாழினை மீட்டும் உருவாக்கித் தக்க இசைப் புலவர்களை ஆதரித்து அக்கருவியினை வாசித்தும் பயிற்சி பெறச் செய்தலும் இவ்வாறே மறைந்துபோன பழந்தமிழிசைக் கருவிகளை உருவாக்கி வழக்கத்திற்குக் கொணர்ந்து பயிற்சியினையளித்துத் தமிழிசையின் சிறப் பினே உலக மக்கள் உணரும் வண்ணம் செய்தலும் சங்க காலம் முதல் இன்றளவும் ஆயிரக்கணக்கில் இயற்றப் பெற்றுள்ள இசைத்தமிழ்ப் பாடல்கள் தமிழக இசையரங்குகளிற் சிறப்பாகப் பாடப்பெறுமாறு ஊக்கமளித் தலும் தமிழிசைக்கு ஆக்கமான பணிகளாகும். தமிழ்மக்கள் திசையனத்தின் பெருமையெலா ந் தென்றிசையேவென்றேற வும் அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவும் இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருகவும் தங்கள் தங்களால் இயன்றபணிகளை ஆர்வ முடன் புரிதல்வேண்டும் என அன்புடன் வேண்டி இந் நூலினை நிறைவு செய்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/215&oldid=745072" இலிருந்து மீள்விக்கப்பட்டது