பக்கம்:இசைத்தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இசையமைதி சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இனிய ஓசைத் திறத்தாற் புலப்படுத்துவது இசையாகும். மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசையென்றும் பண் ணென்றும் பெயராம். மக்கள் பெற்ற உடம்பினது அளவு அவர் தம் கையால் தொண்ணுற்ருறு அங்குலம். இதனுள் மேலே நாற்பத்தேழரை அங்குலமும் கீழே நாற்பத்தேழரை அங்குலமும் விட்டு நடுகின்ற ஓரங்குலம் மூலாதாரம் ஆகும். இதன் மேலே நால்விரல் விட்டுப் பின்னுதாரம் நின்றியங்கும். 'துய்ய வுடம்பளவு தென்னுாற்ரு றங் குலியா மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் - வையத் தருபாலு நாற்பதோ டே ழ்பாதி நீக்கிக் கருவாகும் ஆதாரங் காண்’’ என்ற பழம்பாடல் இசைக்குப் பிறப்பிடமாயுள்ள முலா தாரத்தின் அமைப்பினை விளக்குகின்றது. இம்மூலாதா ரத்தையடுத்து உந்தித்தானத்தில் எழுந்த வளியினைத் துணையாகக் கொண்டே உயிரும் மெய்யுமாகிய எழுத் தொலியும் ஏனைய இசையோசைகளும் தோன்றி இடை பிங்கலையால் வெளிப்படும் என்பர். இந்நுட்பம், 'ஆதாரம் பற்றி யசைவ முதலெழுத்து மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரும் உந்தி யிடைவளியா யோங் குமிடை பிங் கலையால் வந்துமே லோசையாம் வைப்பு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/27&oldid=745078" இலிருந்து மீள்விக்கப்பட்டது