பக்கம்:இசைத்தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? எனவும். 'ஐவகைப் பூதமும் ஆய சரீரத்து மெய்பெற நின்றியங்கு மெய்யெழுத்தாற் றுய்ய ஒருநாடி நின்றியங்கி உந்திமே லோங்கி வருமா லெழுத்துடம்பின் வந்து’ எனவும் வரும் பழைய பாடல்களால் அறிவுறுத்தப்பெற்றது முற்குறித்த மூலாதாரத்திலிருந்து இசையினை எழுப்பு மிடத்து, மகரமெய்யினலே சுருதியைத் தோற்றுவித்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் நாதத்தைத்தொழில் செய்து பாடுதல் தொன்றுதொட்டு வரும் இசைத்தமிழ் மரபாகும். இங்ங்ணம் மூலாதாரத்தினின்றும் இசையை யெழுப்பிப் பாடும் முறையினை 'ஆளத்தி என வழங்குவர். ஆளத்தி செய்யுமிடத்துத் தென்ன என்றும் தென என்றும் இரண்டசையுங் கூட்டித் தென்னதென என்றும் பாடப் படும். மெய்யெழுத்தாகிய பதினெட்டெழுத்துள்ளும் மவ்வும் நவ்வும் தவ்வும் அல்லாத மற்றையெழுத்துக்கள் ஆளத்திக்கு வரப்பெரு என்பர். "மகரத்தி ைெற்ருற் சுருதி விரவும் பகருங் குறினெ டில்பா ரித்து-நிகரில் த் தென்ன தெளுவென்று பாடுவரேல் ஆளத்தி மன்னுவிச் சொல்லின் வகை” எனவும், குன்றக் குறிலேந்துங் கோட நெடிலேந்து நின்ருர்ந்த மந்நகரந் தவ்வொடு-நன்ருக நீளத்தால் ஏழும் நிதானத்தால் நின்றியங்க ஆளத்தி யாமென் றறி’ எனவும் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை யுரையில் மேற் கோளாக வரும் வெண்பாக்கள் ஆளத்தியின் இயல்பினே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/28&oldid=745079" இலிருந்து மீள்விக்கப்பட்டது