பக்கம்:இசைத்தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நன்கு புலப்படுத்துதல் காணலாம். இசையினைத் தோற்று வித்துத் தொழில் செய்யும் முறையாகிய இவ் ஆளத்தியினை ஆலாபனை என வழங்குவர் இக்காலத்தார். இசைச் சுருதியினைத் தோற்றுவித்தற்கு மகரமெய் துணையாகப் பயன்படும் முறையினை மகரத்தின் ஒற்ருற் சுருதி விரவும் என்ற தொடரால் நன்குணரலாம். இம் முறை தேவார ஆசிரியர்கள் காலத்திலும் வழக்கில் இருந் ததென்பது, "மும்மொன்றிசை முரல் வண்டுகள்" (1-11-3) என வரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடற்ருெடரால் நன்கு விளங்கும். இத்தொடரில் மும்ம் என்று மகர வொற்ருல் இசை முரலும் முறை இனிது விளக்கப் பெற் றிருத்தல் காணலாம். இசை, பண் என்பன காரணப் பெயர்கள்: பல இயற் பாக்களோடு நிறத்தை (இராகத்தை) இசைத்தலால் இசை யென்று பெயராயிற்று. பாக்களோடு இயைத்துரைக்கப் பட்ட இசையினை நெஞ்சு, மிடறு, நா, முக்கு, அண்ணம், உதடு. பல், தலை என்னும் எட்டிடங்களிலும், எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைத் தொழில்களால் சீர்பெறப் பண்ணிப் பாடப்பெறுவது பண் எனப்படும்

  • பாவோ டணதல் இசையென்ருர்; பண்ணென்ருர்

மேவார் பெருந்தானம் எட்டானும்-பாவாய் எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தமையாற் பண்ணென்று பார்” என்ற பாடல் இப்பெயர்க் காரணங்களை விளக்குவதாகும். வரைகோடாக வரைந்த ஒவியத்தினைப் போன்றது தாளத் தோடு அமைந்த இயற்பாவினது ஒசை. கோடாக அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/29&oldid=745080" இலிருந்து மீள்விக்கப்பட்டது