பக்கம்:இசைத்தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 என மெலிவு நான்கும், சமன் ஏழும், வலிவு மூன்றுமாக அமைந்திருந்தன. குரல் முதலாக ஏழிசைகளும் அமைந்து நிற்பது, குரற்கிரமம் எனப்படும். இளி முதலாக நிற்பது இளிக்கிரமம் எனவும், காந்தாரம் முதலாக நிற்பது, தாரக் கிரமம் எனவும் வழங்கப்படும், முற்குறித்த ஏழிசைகளுள் தாரம்' என்னும் இசையே இசை வளர்ச்சிக்கு ஆதாரமாய் முதற்கண் விளங்கியது என்பர். தாரம்' என்ற இசை, ஆண்மக்கள் குரலிலும், 'குரல் என்ற இசை மகளிர் குரலிலும் இயல்பாகப் புலப் படும் என்பர். தாரத்தின் வழியிசையாக உழையும், உழை யின் வழியிசையாகக் குரலும், குரலின் வழியிசையாக இளி யும், இளியின் வழியிசையாகத் துத் தமும், துத்தத்தின் வழி யிசையாக விளரியும், விளரியின் வழியிசையாகக் கைக்கிளே யும் தோன்றும். இப்பிறப்பு முறை, 'தாரத்துட்டோன்றும் உழை; உழையுட்டோன்றும் ஒருங் குரல்; குரலினுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளே தோன்றும் பிறப்பு’’ என்ற பாடலில் தெளிவாகக் குறிக்கப்பட்டது. இசைத் தோற்ற முறையாகிய இதனைக் கூர்ந்து நோக்குங்கால், ஐந்தாம் நரம்பின் அடைவு முறையிலே ஏழிசையும் பிறப்பன என்பதும் இவ்வமைப்பில் சட்சத்தோடு இயல்பாகவே தோன் றுவது பஞ்சமம் என்பதும் நன்கு விளங்கும். நின்ற நரம்பிற்கு ஐந்தாம் நரம்பு, கிளே நரம்பு எனப்படும். நான்காம் நரம் பினை நட்பு என்றும், முன்ரும் ஆரும் நரம்புகளைப் பகை' என்றும், இரண்டாம் ஏழாம் நரம்புகளை இணை’ என்றும் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/31&oldid=745083" இலிருந்து மீள்விக்கப்பட்டது