பக்கம்:இசைத்தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 யெனவும், மூவலகினைப் பற்றிசை எனவும் கொள்ளலாம். ஓரலகாகிய குற்றிசை இரண்டு கூடி நிற்பது, 'நெட்டிசை” யெனப்படும். பற்றிசையாகிய முன்று கருதியிலிருந்து குற்றிசையாகிய ஒரு சுருதியை நீக்கினல் எஞ்சி நின்ற இரு சுருதியும் விதியிசை எனப்படும். இதனைப் பிரமாண சுருதி என்பர் வட நூலார். சட்ச பஞ்சமமாகிய கிளே முறைப்படி பதினெரு சுருதி களும், சட்ச மத்திமமாகிய நட்பு முறைப்படி பதினுெரு சுருதிகளும் பிறப்பன. மேற்குறித்த இருபத்திரண்டு சுருதி களே பழந்தமிழ் இசைமரபில் வழங்கிய இருபத்திரண்டு இசை நிலைகளாகும். இவ்விருபத்திரண்டு சுருதிகளையும் பன்னிரண்டு இராசி வீடுகளில் வைத்து ஆராய்ந்து இசைநுட்பம் அறியும் முறை பழந்தமிழர் கண்டதாகும். சட்ஜம் நீங்கலாக எஞ்சியுள்ள பதினுெரு வீட்டிலும் நட்பு முறையிற் பிறந்த சுருதி ஒன்றும், கிளே முறையிற் பிறந்த சுருதி ஒன்றும் ஆக இரண்டிரண்டு சுருதிகள் நிற்பன. இங்கனம் ஒரு வீட்டினுள் நிற்கும் நட்பு, கிளே என்னும் இருவகைச் சுருதிகளுக்கும் இடையே அமைந்த வேறுபாடு முற்குறித்த பிரமான கருதியாகிய ஈரலகாகும். இச் சுருதி, அளவிற் சிறியதாதலின், ஒரு வீட்டில் அமைந்த நட்பு, கிளே என்னும் இருவகைச் கருதி களையும் கமக முறையினலே வேறுபாடின்றிப் பயன்படுத்திக் கொள்வர் இசைவாணர். பண்டைத் தமிழ் நூல்களில் வழங்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இனி, விளரி, தாரம் என்னும் ஏழிசை நிரலுக்கும் இக் காலத்தில் சட்ஜம், ரிஷபம், காந்தாரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/33&oldid=745085" இலிருந்து மீள்விக்கப்பட்டது