பக்கம்:இசைத்தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கும் ஏழிசை நிரலுக்கும் உள்ள தொடர்பினை உள்ளவாறு அறிந்து கொண்டால் தான், இவ் எழிசைகளைக் குறித்து அமைந்த பண்டைத் தமிழிசை மரபுக்கும், இக்காலத்துக் சட்சம் முதலாக வழங்கும் இசை அமைப்புக்களும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளே உள்ளவாறு உணர முடியும், பிங்கலந்தை, சேந்தன் தி வாகரம், சூடாமணி நிகண்டு முதலிய தமிழ் நூல்களிலும், சங்கீத மகரந்த, சங்கீத ரத்தினகரம் முதலிய வடமொழி நூல்களிலும் குரல், துத்தம் முதலாக எண்ணப் படும் ஏழிசைகளுக்கும் சட்சம் ரிஷபம் முதலாக எண்ணப் படும் ஏழிசைகளுக்கும் முறையே ஒத்தனவாகக் குறிக்கப் பட்டுள்ள ஓசைகளை ஒப்புநோக்கி, அருள்மிகு விபுலானந்த அடிகளார், யாழ்நூற் பாயிரவியலிற் பின்வருமாறு அட்ட வணைப்படுத்திக் காட்டியுள்ளார். இனி மயில், தவளை ஷட்ஜம் விளரி tiՑr ரிஷபம் தாரம் ஆடு காந்தாரம் குரல் வண்டு, கொக்கு மத்திமம் துத்தம் கிளி, குயில் பஞ்சமம் கைக்கிளை குதிரை தைவதம் உழை யானை நிஷாதம் உழை என்னும் இசை நரம்பின் ஒசை, யானையின் ஒலியாகும் எனச் சேந்தன் திவாகரம் முதலிய தமிழ் நூல் கள் கூறுவது போலவே, யானையின் ஒலி, நிஷாத சுத் துக்கு உரியதெனச் சங்கீத ரத்தினகரம் கூறுகின்றது. எனவே, உழை நிஷாதம் என்பது பெறப்பட்டது. பண்டை விளரியும் பிற்காலத்து ரிஷபமும் பசுவின் ஒலியைத் தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/34&oldid=745086" இலிருந்து மீள்விக்கப்பட்டது