பக்கம்:இசைத்தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 துத்தம் முதலிய ஏழிசைகளாக இசைக்கும் சுருதிப் பகுப்பு நிரல் காலந்தோறும் வேறுபட்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அமைந்த சுருதிப்பகுப்பு நிரலுக்குத் தாரக் கிரமம் என்று பெயர். இக் கிரமத்தை அடியொற்றியே இளிக் கிரமம், குரற்கிரமம் முதலிய நுண்ணிய சுருதிப் பகுப்பு நிரல்கள், இசைவாணர்களால் இயல்பாகவே தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றுள் முதலிற்ருேன்றிய தாரக் கிரமத்தின் சுருதிப் பகுப்பினை உணர்ந்தாலன்றி அதன்பின்னர்த் தோன்றிய குரற்கிரமம் இளிக் கிரமம் முதலிய ஏனைக் கிரமங்களின் அமைப்பினை உணர்ந்து கொள்ளுதல் இயலாது. பன்னிரண்டு இராசி வீடுகளிலும் ஏழிசைகளே நிறுத்தி அவற்றுள் ஒவ்வொன்றினையும் ஆதார சட்சமாகக் கொண்டு இசை உருவங்களே வளர்த்துச் செல்லும் நெறியில், ஏழ்பெரும் பாலைகளும் அவற்றின் அந்தரங்களாகிய ஐஞ்சிறு பாலைகளும் ஆகிய பன்னிருபாலேகளின் இசை உருவங்களே நம் தமிழ் முன்னேர் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதனைச் சிலப்பதிகாரவுரை கொண்டும், அவற்றில் எடுத்தாளப் பெற்ற இசைநூல் மேற்கோட் சூத்திரங் கொண்டும எண்ணுரல், பூதநூல் அடிப்படையில் அடிகளார், யாழ்நூலில் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்கள். ஏழிசைகள் நிற்கும் இராசி வீடுகள் இவை என்பதனை, 'இளியிட:ங் கற்கடக மாம்விளரி சிங்கம் தளராத தார மதுவாம் . தளராக் குரல் கோல் தனுத்துத்தம் கும்பம் கிளேயாம் வரலால் உழைமீன மாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/36&oldid=745088" இலிருந்து மீள்விக்கப்பட்டது