பக்கம்:இசைத்தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 களுள் ஒவ்வொன்றும் முதல் நரம்பாக வருதற்கு உரியன என்பது, குரல் குரலாக, துத்தங்குரலாக, கைக்கிளை குர லாக, உழை குரலாக, இளி குரலாக, விளரி குரலாக, தாரங்குரலாக எனவரும் உரைத் தொடர்களாற் புலம்ை. இத்தொடற்களிற் குரல் என்பது, முதல் எடுக்கும் நரம்பு என்ற பொருளிலே வழங்குதல் காணலாம். பண்டை நாளில் தாரம் முதல் தாரம் ஈருக நின்ற நரம்புகளின் இடையே அமைந்த சுருதி வகைகளாகிய இடை விகிதங் கள் ஏழும் 4-4-4-1-4-1-4-1 என நின்றன எனவும் இத்தகைய நரம்பு நிரலே தாரக் கிரமம் எனப்பட்டது எனவும் யாழ்நூலாசிரியர், தாரத்கிரமத்தின் சுருதிப் பகுப் பினக் கணித வாயிலாக ஆராய்ந்து தந்துள்ளார்கள், இருபத்திரண்டு சுருதிகளில் 1, 4, 5, 8, 9, 10, 12, 13, 14, 17, 18, 21, என்னும் பன்னிரண்டு சுருதிகளே தாரக் கிரமத்திற்காணப்படுகின்றன எனவும், இவற்றுள் 8,14,2! 256 8: | 28 243 நான்கும் --, --, --, --, என்னும் பெரிய 243 64 8; #28 பின்னங்களாகிய அசைவெண்களைக் கொண்டனவாதலின் சிறப்பிலவாகக் கருதப்பட்டன எனவும், இவற்றை நீக்க எஞ்சி நிற்கும் சிறப்புடைச் சுருதிகள் எட்டேயாம் எனவும், சிறப்புடைச் சுருதிகள் பலவற்ருல் நடப்பது இசையினிமை அடைதற்குக் காரணமாதலின் பண்டை இசையாசிரியர்கள் வேறு கிரமங்களைக் கண்டு அவற்றைப் பயன்படுத்துவாரா யினர் எனவும் யாழ்நூலாசிரியர் தரும் விளக்கம் பண்டைத் தமிழர் கண்டு வளர்த்த ஏழிசைச் சூழலில் புகுந்து அவற் றின் நுட்பங்களே ஆராயப் புகுவார்க்கு ஒளி காட்டும் நல் விளக்காக அமைந்துளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/39&oldid=745091" இலிருந்து மீள்விக்கப்பட்டது