பக்கம்:இசைத்தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நான்கு சுருதியைப் பெறுகின்றது. துத்தம், தனு மகரத்தி லுள்ள நான்கு சுருதியைப் பெறுகின்றது. கைக்கிளே, கும்பத்திலுள்ள மூன்று கருதியைப் பெறுகின்றது. உழிை, மீனம் மேடத்திலுள்ள இரண்டு சுருதியைப் பெறுகின்றது. ஆகவே, இளிக் கிரமத்தின் அலகு நிலைகள் இளி முதலாக இ வி தா ශ්‍රී ஆ 叙隐态 $7– 载 3 2 4 4 3 2 என நின்றன. இவற்றைக் குரல் முதலாக எடுக்க 莎 து: శబ్రీ : 象一 இ வி தா 4 4 3 2 4 3 2 எனவரும். இளிக்கிரமத்திற்குரிய இச்சுருதி அமைப்பினை ' குரல்துத்தம். நான்கு கிளேமூன் றிரண்டாம் குரையா உழை இளி நான்கு - விரையா விளரியெனின் மூன்றிரண்டு தார மெனச் சொன்னர் களரிசேர் கண்ணுற் றவர்’ எனவும், 'குரலே துத்தம் இளியிவை நான்கும் விளரி கைக்கிளே மும்மூன் ருகித் தளராத் தார ம் உழையிவை யீரிரண் டென வெழு மென்ப அறிந்திசி னோரே' எனவும் வரும் சிலப்பதிகார உரை மேற்கோட் சூத்திரங்கள் உணர்த்துதல் அறியத்தகுவதாகும். ச ரி க ம ப த நி என்னும் ஏழிற்கும் முறையே 4, 3, 2, 4, 4, 3, 2 என்னும் சுருதிகள் உரியன என இசையாசிரியர் கூறுதலின், இளிக் கிரமத்து இளங்கோவடிகள் காலத்தில் வழங்கிய இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என்னும் சுருதிப் பகுப்பு நிரலே, ச ரி க ம ப த நி என நின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/41&oldid=745093" இலிருந்து மீள்விக்கப்பட்டது