பக்கம்:இசைத்தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இங்கே குறிக்கப்பட்ட ஏழிசை வட்டத்தில், மாயவன கிய குரல் நரம்பினைப் பின்னைப் பெயருடைய துத்தமும் தாரமும் முறையே பின்னும் முன்னும் சேர்ந்து நின்றன, மாயவனுக்கு முன்னேன் பலதேவனகிய இளியை உழையும் விளரியும் முறையே பின்னும் முன்னும் சேர நின்றன. கைக்கிளை துத்தத்தின்பின் நின்றது. இங்குக் குறித்த ஏழிசை நிரல், இளி, விளரி தாரம், குரல், துத்தம், கைக்கிளை உழை என இளிக் கிரமமாக அமைந்துள்ளமை காணலாம். எனவே இளி முதலாகிய இளிக்கிரமத்தினையே இளங்கோவடிகள் இங்குக் குறித்துள்ளார் என்பது நன்கு விளங்கும். அரங்கேற்று காதையில், வண்ணப்பட்டடை யாழ் மேல் வைத்து ஆங்கு என்னும் அடிக்கு 'இளிக் கிரமத் தாலே பண்களை யாழ்மேல் வைத்து' என அரும்பதவுரை யாசிரியரும், பட்டடை - நரம்புகளில் இளிக்குப் பெயர் என்ன? எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின், வண்ணம் - நிறம். இதனை யாழ்மேல் வைத் தென்க. ஆங்கு. அசை. இளிக்கிரமத்தாலே பண்களை யாழ்மேல் வைத்து எனக் கூட்டினும் அமையும்" என அடியார்க்கு நல்லாரும் உரை வரைந்துள்ளார்கள். எனவே, இக் காதையில் இளங்கோவடிகள் கூறும் தாரத்தாக்கம் என்னும் இசை நுட்பச் செய்கை, இளிக்கிரமத்துக்கே உரியதாதல் இனிது புலனும். இந் நுட்பத்தினை அருள்மிகு விபுலானந்த அடி களார், யாழ்நூல் பாலைத் திரிபியலிலும் பண்ணியலிலும் கணித முறைப்படி நன்கு விளக்கியுள்ளமை ஒர்ந்துணரத் தகுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/44&oldid=745096" இலிருந்து மீள்விக்கப்பட்டது