பக்கம்:இசைத்தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இதுகாறும் கூறியவாற்ருல், ஏழிசைகளையும் இளி முதலாகவைத்து எண்ணப்படும் இளிக்கிரமமே இளங்கோ வடிகள் காலத்து நிலவியதென்பது நன்கு விளங்கும். அங்கனமாயினும் குரல் முதலாக வைத்து எண்ணப்படும் குரற்கிரமமும் இளங்கோவடிகள் காலத்தில் வழக்கிலிருந் தமையாலும், குரற்கிரமத்தில் தோன்றும் இசை பலவாற் ருனும் சிறப்புடையது ஆதலானும் அச் சிறப்பு நோக்கி ஏழிசைகளையும் குரல் முதலாக வைத்து எண்ணுதல், இசை நூல் மரபாயிற்று எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். தாரக் கிரமம். இளிக்கிரமம், குரற் கிரமம், துத்தக் கிரமம், விளரிக் கிரமம், புதிய விளரிக் கிரமம் என்பன பற்றியும் மேற்குறித்த கிரமங்களுக்கிடையே அமைந்த தொடர்பு பற்றியும் அறிந்துகொள்ள வேண்டிய இசை நுட்பங்களே யாழ்நூலிற் காணலாம். குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோசையிலும் அமரோசையிலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிறுத்திய சுரங்களிலே முதல், முறை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை அறிந்து இசைப் புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தினை ஆளத்தி செய்து (ஆலாபனை) பாடுதல் பண்ணுநிலை எனப் படும். மேற்செம்பாலை, செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலே, கோடிப்பாலை, விளரிப்பாலை எனவரும் ஏழ்பெரும்பாலேகளும், இவற்றின் அந்தரங்களா 1. மேற்செம்பாலேயினே மேச கல்யாணி எனவும், செம் பாலையினே அரிகாம் பே தி எனவும், படும&லப்பாலேயினே நட பைரவி எனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/45&oldid=745097" இலிருந்து மீள்விக்கப்பட்டது