பக்கம்:இசைத்தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இசைத்தமிழ் இலக்கியம் இயற்றமிழில் தேவபாணியும் இசைத் தமிழில் வண்ணப் பகுதியாகிய செந்துறையும் நாடகத் தமிழில் அவிநயத் திற்கு உரியவாகிவரும் வெண்டுறையும் என முத்தமிழுக்கும் உரியவாகிய இசைப்பாடல் இலக்கியங்கள் தொன்று தொட்டு வழங்கி வந்துள்ளன. இடைச்சங்கத்தாரால் இயற்றப்பெற்ற இசைப்பாடல் கலியும் குருகும் வெண்டாளி யும் வியாழமாலே அகவலும் என இத்தொடக்கத்தன என் பர் களவியலுரையாசிரியர். கடைச்சங்கத்திருந்து தமிழா ராய்ந்த புலவர்களால் ஆக்கப்பட்டனவாகக் களவியலுரை கூறும் சிற்றிசையும் பேரிசையும் ஆகிய இசைத்தமிழ் இலக்கியங்கள் இடைக்காலத்தில் மறைந்து போயின. எனினும் முத்தமிழும் நன்குணர்ந்த சோமுனிவராகிய இளங்கோவடிகள் இயற்றிய இயலிசை நாடகப் பொருட் டொடர் நிலையாகிய சிலப்பதிகாரத்தில் கானல்வரியிலுள்ள இசைப்பாடல்களும் வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியபகுதிகளில் அமைந்த இசைப்பாடல்களும் முன்னை இசையாசிரியர் பாடிய இன்னிசையுருக்களாக நமக்குக் கிடைத்துள்ளமை நமது நற்பேறேயாகும். கடைச்சங்கத்தாரால் தொகுக்கப்பட்ட தொகைநூல் களுளொன்ருகிய எழுபது பரிபாடலினுள் இருபத்திரண்டு பாடல்களே இப்பொழுது முழுமையாகக்கிடைத்துள்ளன. இப்பாடல்களின்யின் அவற்றுக்குரிய துறையும் பாடினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/57&oldid=745110" இலிருந்து மீள்விக்கப்பட்டது