பக்கம்:இசைத்தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 'நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரையனும் பாடிய நற்றமிழ் மாலே சொல்லியவே ச்ொல்லியேத்துகப்பானே' என வரும் அவரது வாய்மொழியால் நன்கு விளங்கும். சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள், அவர் திருவாயிலிருந்து வெளிவரும்பொழுதே இன்னிசையுடன் வெளிப்பட்ட பண் ளுர்ந்த பாடல்கள் என்பது. 'நண்புடைய நன்சடையன் இசைஞானிசிறுவன் நாவலர்கோன் ஆரூரன் நா வினயந்துரை செய் பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம் பாடவல்லார் அல்லலொடு பாவமிலர்தாமே? (7-6- 1) ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ்டத்தும்’ (7-67-11) ‘மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலாரூரன் சந்தம் இசையொடும் வல்லார்’ (7-73-11) ஏழிசை யின்றமிழால் இசைந்தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே' (7-100-10) என நம்பியாருரர் வாய்மொழிகளாக வரும் திருக்கடைக் காப்புத் தொடர்களால் இனிது விளங்கும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையிறைவரால் தடுத்தாட் கொள்ளப்பெற்று முதன் முதற் பாடிப் போற்றிய பித்தா பிறை சூடி என்னும் திருப் பதிக அமைப்பினை,

  • ;

'கொத்தார்மலர்க் குழலாளொரு கூறயடி யவர்பால் மெய்த்தாயினும் இனியானேயவ் வியகுவலர் பெருமான் பித்தாபிறை சூடியெனப் பெரிதாந்திருப் பதிகம் இத்தாரணி முதலாமுல கெல்லாமுய எடுத்தார்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/62&oldid=745116" இலிருந்து மீள்விக்கப்பட்டது