பக்கம்:இசைத்தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 “முறையால்வரு மருதத்துடன் மொழியிந்தள முதலிற் குறையாநிலை மும்மைப்படி கூடுங் கிழமையில்ை நிறை பாணியின் இசைகோள் புனர் நீடும் புகல் வகையால் இறையான் மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகரில்லான் (பெரிய, தடுத்தாட்-74, 73} எனவரும் பாடல்களில் சேக்கிழாரடிகள் இனிது விளக்கி யுள்ளார். இவ்விளக்கத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் யாவும் சந்த நலம் வாய்ந்த செந்தமிழ் இசைப்பாடல்களே யென்பது நன்கு புல்ஞம். நம்பியாருரர் திருவிழிமிழலைப்பெருமானை நோக்கி, "விண்ணிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெருமானே, நீவிர் இத்திருக்கோயிலில் அமர்ந்திருக்கும் நிலையிலேயே திருஞானசம்பந்தரும் அப்பர்டிகளும் பாடிப்போற்றும் இனிய இசைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழவேண்டுமென்னும் பெரு வேட்கையால் அப்பெருமக்கள் இருவர்க்கும் நாடோ றும் படிக்காசு கொடுத்தருளினீர். அவ்விரு பெருமக்களும் சொல்லியனவே சொல்லி நும்மை இன்னிசைத் தமிழாற் பாடிப் போற்றும் இயல்புடைய அடியேற்கும் அங்ஙனம் அருள்புரிவீராக” என வேண்டிப் போற்றுகின்ருள். 'பரத்த பாரிடம் ஊரிடைப்பலி பற்றிப் பார்த்துணுஞ் சுற்ற மாயி னிர் தெரிந்த நான் மறையோர்க் கிடமாய திருமிழ8ல இருந்து நீர்தமிழோடிசை கேட்கும் இச்சையாற்காசு நித்தல் நல்கினீர் அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/63&oldid=745117" இலிருந்து மீள்விக்கப்பட்டது