பக்கம்:இசைத்தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இத்தொடரில் மூவர் திருப்பதிகங்களும் தேவாரம் என்ற பெயராற் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். இரட்டை யர்க்குக் காலத்தாற் பிற்பட்டவர் எல்லப்பநாவலர். இரட் டையர் ஏகாம்பரநாதருலாவிற் குறிப்பிட்ட திருப்பாட்டும் சைவ எல்லப்பநாவலர் குறிப்பிட்ட தேவாரமும் ஒன்றே யென்பது இங்கெடுத்துக் காட்டிய எல்லப்பநாவலர் கூற் ருல் இனிது புலனுகின்றது. மூவர் திருப்பதிகங்களையும் தேவாரஞ் செய்த திருப்பாட்டு என இரட்டையர் அடை கொடுத்துச் சிறப்பித்தற்குரிய காரணத்தினை ஒரு சிறிது நோக்குவோமாக. தேவாரம் என்னும் இத்தொடர்க்கு அறிஞர் பலரும் வேறுவேருகப் பொருள் கொண்டனர். இதனைத் தேவ.-- ஆரம் எனப்பிரித்து இறைவனுக்கு மாலையானது எனப் பொருள் கூறுவர் சிலர். தேவார ஆசிரியர் முவரும் இறைவனுக்கு அணியும் பாமாலைகளாக அழகிய திருப்பதி கங்களைப் பாடிப் போற்றிய திறத்தை இன்னேர் தம் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். தே-வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தினிடத்து அன்பை விளைவிப்பது எனப் பொருள் கூறுவர் சிலர். "வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவதென்னே' என வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் வாரம் என்னும் சொல் இறைவன்பால் மெய்யடியார்கள் வைத்த பேரன்பு என்னும் பொருளில் வழங்கப் பெறுதல் இவண் கருதற் குரியதாகும். கி. பி. 132 முதல் 1339 வரை படைவீட்டு ராச்சியத்தை யாண்ட மல்லிநாத சம்புவராயன் காலத்துப் புலவர் பெருமக்களான இரட்டையர்களே மூவர் 1. திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய தமிழிலக்கிய வரலாறு (13, 14, 15 ஆம் நூற்றண்டுகள்) பக்கம் 56.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/65&oldid=745119" இலிருந்து மீள்விக்கப்பட்டது