பக்கம்:இசைத்தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5{} வது முதல்நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசை யியக்கம் நான்கினுள் ஒன்று. மந்தநடையுடையதாய்த் தாழ்ந்து செல்லும் இன்னிசையியக்கம் முதனடையெனப் படும். முடுகிச் செல்லும் விரைந்த நடையினையுடைய இசையியக்கம் திரள் எனப்படும். இவ்விரண்டிற்கும் இடை நிகர்த்ததாய்ச் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் வாரம் எனப்படும். சொற்செறிவும் இசைச்செறிவும் உடைய பாடல் கூடையெனப்படும். இவ் விசையியக்கம் நான்கின் இயல்பினையும் சிலப்பதிகார வுரையில் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் நன்கு விளக்கியுள்ளார்கள். இழுமென ஒழுகிய சொல் நடையும் செம்பாகமாகப் பொருளுணர்த்தும் பொருட் டெளிவும் வாய்க்கப்பெற்ற செய்யுளே வாரம் என்னும் இசையியக்கம் வாய்ந்த பாடலாகுமென்பது அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்களின் கருத்தாகும். இயற் பாட்டுடன் இசைக் கூறுபாடுகளே இசைத்துப் பாடவல்ல இசைப்புலவனே வல்லோன் எனவும் அவளுல் இயற்பாட |டன் புணர்க்கப்படும் இசைக்கூறுபாட்டினை வாரம்' எனவும் இயலிசைத் திறத்தில் வன்மையில்லாதவற்ை புணர்க்கப்பெறும் வார இசை சிதைந்தொழியுமியல் பிற் றெனவும் வல்லோன் புணரா வாரம் போன்றே 'எனவரும் உவமையால் ஆசிரியர் தொல்காப்பியனுர் விளங்க வுணர்த்தியுள்ளார். இயற்கை வனப்பும் தெய்வ வனப்புமாகிய இருவகை வனப்புகளே இசைப்பாடலுக்குரிய சிறப்புடைப் பொருள் களெனப் பண்டைத்தமிழாசிரியர் கருதினர். இக்கருத்தின லேயே இசைப்பாடல்கள் யாவும் முதற்பொருளும் கருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/67&oldid=745121" இலிருந்து மீள்விக்கப்பட்டது