பக்கம்:இசைத்தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மைத்து என்பது மேற்குறித்த செய்யுளியற் சூத்திரத்தின் பொருளாகும். எனவே தெய்வத்தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டனவே தேவ பாணியாம், அல்லன தேவ பாணியெனத்தகா எனவும் தெய்வம் படர்க்கையாயவழிப் புறநிலை வாழ்த்தாம் எனவும், தெய்வம் தன்மையில் சொல்லிற்ருகச் செய்யுள் செய்தல் கூடாதெனவும் கூறு வர் பேராசிரியர். தேவபாணி முத்தமிழ்க்கும் பொது வென்றும் அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சக வொருபோகாய்ப் பெருந்தேவபாணி சிறுதேவபாணியென இருவகைத்தாய் வருமென்றும் அவ்வாறு வரும் தரவினை நிலையென அடக்கி முதலிலுள்ள தரவினை முகநிலையெனவும் இடையிலுள்ள தரவினை இடைநிலையெனவும் இறுதியில் நிற்பனவற்றை முரிநிலையெனவும் பரவுதற் பொருண்மை யால் செய்யுளியலிற் பெயர் கொடுத்தாரென்றும் அடி யார்க்கு நல்லார் விளக்கங் கூறுவர். "கூறிய வுறுப்பிற் குறைபா டின்றித் தேறிய விரண்டு தேவபாணியும்’ என்பது அடியார்க்கு நல்லார் தரும் உரைமேற் கோளாகும். தேவபாணி யென்னும் பெயரையொட்டியே தேவாரம் என்னும் இப்பெயரும் தோன்றி வழங்கி விருத்தல் வேண்டும். தேவபாணி யென்பது முன்னிலை யிடத்தில் தெய்வத்தைப் பரவிய செய்யுளேக் குறித்த பெயரென்பது பேராசிரியர் கருத்தாகும். வாரம் என்பது முன்னிலை படர்க்கை என்னும் ஈரிடத்திற்கும் பொதுவாகிய தெய்வப் பாடலைக் குறித்து வழங்குவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/70&oldid=745125" இலிருந்து மீள்விக்கப்பட்டது