பக்கம்:இசைத்தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அகளங்கப் பிரியனுக்கும்” எனவும், "உறையூர்க் கூற்றத்துத் திருவடகுடி மகாதேவர் ஸ்தானமடம் தேவாரத்துக்குத் திருப் பதியம் விண்ணப்பஞ் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக் கரையனுக்கும்" எனவும் வரும் கல்வெட்டுத் தொடர்கள்,' வழிபாட்டிற்கும் தெய்வ இசைப் பாடல்களுக்குமுள்ள நெருங் கிய தொடர்பை நன்கு புலப்படுத்துதல் காணலாம். மேற் குறித்த கல்வெட்டுத் தொடரொன்றில் திருவடகுடி மகா தேவர் ஸ்தானமடம் என வழிபாடு நிகழுமிடத்தைக் குறித்த பின்மீண்டும் தேவாரத்துக்கு எனச்சுட்டியதன் கருத்துஈண்டு நோக்கத்தக்கதாகும். இத்தொடரில் வந்துள்ள தேவார மென்னுஞ் சொல் கடவுள் வழிபாட்டிற்கு இன்றியமையாத தெய்வப்பாடல் பாடுதலாகிய இசைத் தொண்டினைச் சிறப்பாகக் குறித்து நிற்றல் காணலாம். முதல் இர சேந் திரனது ஆட்சிக் காலத்தில் நாங்கூருடையான் பதஞ்சலி பிடாரன் என்பான் தேவார நாயகம் என அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ருன் என அறிகின்ருேம்.” பிடாரன் என்னும் சொல், இசைபாடுபவனைக் குறித்து வழங்கும் பெயராகும். எனவே பதஞ்சலிபிடாரன் தேவாரநாயகம் என அழைக்கப்பெறுதற்கு அவன் கற்றுவல்ல தெய்வ இசைப்பாடலே கருவியாயமைந்ததென்பது உய்த்துணரப் படும். திரிபுவனச்சக்கரவர்த்திகள் இராசராச தேவரது 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் திருக்கழுமலம் திருத்தொண்டீஸ்வரமுடைய நாயனர் கோயிலையடுத்துத் "திருமுறைத் தேவாரச்செல்வன் மடம்' என ஒரு திருமடம் 1. தென்னிந்தியக் கல்வெட்டு, தொகுதி w11, எண்-260, ைஎண்-675. 2. ஆண்டறிக்கை 1932, எண்-97.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/72&oldid=745127" இலிருந்து மீள்விக்கப்பட்டது