பக்கம்:இசைத்தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 ஏழு திருமுறைகளாக விளங்கும் இத்திருப்பதிகங்களிலுள்ள திருப்பாடல்களின் தொகை 3250 ஆகும். இவைகளே நமக்குக் கிடைத்துள்ள தேவாரத் திருப்பதிகங்களா கும். இவ்வேழு திருமுறைகளையும் அடங்கல்முறை என வழங்குவர். முவர் முதலிகள் திருவாய் மலர்ந்தருளிய பதினுயிரத்துக்கு மேற்பட்ட திருப்பதிகங்களில் இங்குக் குறித்தபடி 796 திருப்பதிகங்களைத்தவிர எஞ்சிய ஒன்பதி குயிரத்துக்கு மேற்பட்ட திருப்பதிகங்கள் தமிழ் மக்களது விழிப்பின்மையால் சிதலரிக்கப்பட்டுச் சிதைவுற்று மறைந் தன என்பது திருமுறைகண்ட வரலாற்ருல் வெளியாகின்றது. கி. பி. 1070 முதல் 120 வரையில் ஆட்சிபுரிந்த முதற் குலோத்துங்க சோழனது படைத்தலைவர்களுள் ஒரு வருகிய மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பான் சைவ சமயகுரவருள் முதல்முவரும் பாடிய தேவாரத் திருப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லைத் திருக்கோயிலுள் சேமமுறவைத்தான். இச்செய்தி, முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா ருெத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தின் எல்லே க்கிரி வாய் இசையெழுதினுன் கூத்தன் தில் இலச்சிற் றம்பலத்தே சென்று. எனத் தில்லைத் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்ட கல் வெட்டிற் காணப்படும் வெண்பா வொன்றிற் குறிக்கப்படு தல் காண்க. எனவே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களை நம்பியாண்டார் நம்பி தேடிக் கொணர்ந்து ஏழு திருமுறை களாகத் தொகுத்தபின்னர் அப்பதிகங்கள் அழிந்து போகாத வாறு, தில்லைப் பெருங்கோயிலில் முதற் குலோத்துங்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/76&oldid=745131" இலிருந்து மீள்விக்கப்பட்டது