பக்கம்:இசைத்தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தாழிசையின்றித் தரவு முதலாயின உடையதாகியும், எண் ளுகிய உறுப்பினை இடையிட்டுச் சின்னம் என்றதோர் உறுப்புக்குறைந்தும், அடக்கியலாகிய சுரிதகமின்றித் தரவு தானே அடிநிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக் கலிக்குரிய யாப்பிலும் பொருளினும் வேறுபாடுடையதாகி வருவது கொச்சக ஒரு போக கும் என்பது மேற்காட்டிய நூற்பாவின் பொருளாகும். பல மடிப்புக்களையுடையதாய் அடுக்கியுடுக்கும் உடை வகையினக் கொய்சகம் எனவும் கொச்சகம் எனவும் வழங்குவர். கொய்சகம் என்னும் பெயருடைய அவ்வுடை போன்று சிறியனவும் பெரியனவும் ஆக விரவி அடுக்கியும் தம்முள் ஒப்பஅடுக்கியும் வரும் செய்யுள் வகையினேயே ஆசிரியர் தொல்காப்பியஞர் கொச்சகம் என்ற பெயராற் குறித்தார் என்பது பேராசிரியர் நச்சிளுர்க்கினியர் முதலிய உரையாசிரியர்களின் கருத்தாகும். கொச்சக வொருபோகு என்னும் செய்யுள் விகற்பங்களைக் குறித்துப் பேராசிரியர் கருத்தினையொட்டி நச்சிர்ைக்கினியர் கூறிய விளக்கங்கள் இங்கு நோக்கத்தக்கனவாகும். 'தரவின்ருகித் தாழிசை பெற்றும்’ என்பது. தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஒதியதாவு இன்றித் தாழிசையே பெற்றும் (என்பதாம்). அவை பாணிப் பாட்டாகிய தேவபாணி முதலியன. இது தரவொடு பட்ட தாழிசையிலக்கணமின்றி வேருய் வரும் என்றற்குத் 'தரவின்ருகி' எனத் தரவை விலக்கினர். இனி பத்தும், பதினென்றும், பன்னிரண்டும் ஆகி ஒரு பொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான் கடியின் ஏருது வருதலும், அங்ங்ணம் வருங்கால் தாழ்ந்த ஒசைபெற்றும் பெருதும் வருதலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/79&oldid=745134" இலிருந்து மீள்விக்கப்பட்டது