பக்கம்:இசைத்தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைத்தமிழ் 1. முத்தமிழ்த்திறம் 'முத்தமிழும் நான்மறையும் ஆளுன் கண்டாய்” --திருநாவுக்கரசர் மக்களுடைய புலமைச் செல்வத்தின் குன்ருத நிலைக் களமாக விளங்குவது அவர்கள் பேசும் மொழியாகும். மொழியின் உதவியினலேயே மக்களது கல்வி உருவா கின்றது. மக்கள் தாம் எண்ணிய எண்ணங்களை மற்றவர் களுக்கு விளங்க எடுத்துரைப்பதற்கும், பிறர் எண்ணிய வற்றைத் தாம் கேட்டறிதற்கும் அவர்களால் பேசப்படும் மொழியே இடைநின்று துணை செய்கின்றது. மாந்தர து எண்ணத்தின் வெளிப்பாடாகிய மொழி, அவர் தம் கருத்து வளர்ச்சிக்கும் சொல் வளர்ச்சிக்கும் துணை செய்யும் சிறப் புடையது என்பதனை நுண்ணிதின் உணர்ந்த பண்டைத் தமிழ் மக்கள், தம்மாற் பேசப்படும் தாய்மொழியாகிய தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழாக அமைத் துக்கொண்டனர். உலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக் குதற்குரிய சொல்லமைப்பினையுடையது இயற்றமிழ் எனப் படும். மக்களது மனத்திலே தோன்றிய பல்வேறு எண் ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறன் இயற்றமிழுக்குரியது. தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/8&oldid=745135" இலிருந்து மீள்விக்கப்பட்டது