பக்கம்:இசைத்தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அவை இருசீர் முதல் எண்சீரளவும் வருதலும் என்னும் இன்னுேரன்ன பலபகுதியெல்லாம் வரையறையின்றித் தழுவப்பட்டன. இவ்வேறுபாடெல்லாம் உளவேனும் தாழம் பட்ட ஓசை பெரும்பான்மையவாதலின் தாழிசையென்ருர், இங்ங்ணம் தாழிசைப்பேறு விதந் தோதவே ஒழிந்த உறுப்பெல்லாம் விலக்குண்டமை பெற்ரும்’ எனவும் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது, என்பதற்குத் தேவபாணியும் காமமுமேயன்றி வீடும் பொருளாம் என்பது ஆசிரியர்கருத்தாயிற்று" எனவும், பதிகப்பாட்டிற்கு ஈண்டுக் கூறிய வேறுபாடுகள் திருவாய்மொழி, திருப்பாட்டு, திரு வாசகம் என்கின்ற கொச்சக ஒருபோகுகளிற் காண்க. அவை உலக வழக்கன்மையிற் காட்டாமாயினும் எனவும் நச்சிளுர்க்கினியர் குறித்துள்ளார். இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஈண்டு அவ்வாசிரியரால் திருப்பாட்டு' என்ற பெயராற் குறிக்கப் பெற்றவை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களே என்பதும், திருமுறை ஆசிரியர்களும் ஆழ்வார்களும் அருளிய திருப்பதிகங்கள் தொல்காப்பியச் செய்யுளியலின் படி கொச்சக ஒருபோகு என்னும் யாப்பு வகையைச் சார்ந்தன என்பதும், இத் திருப்பதிகங்கள் ஒரு பொரு மேல் மூன்றடுக்கி வரும் ஒத்தாழிசைகளைப் போன்று பொருளமைப்பில் ஒரு நிகரணவாய்ப் பத்தும் பதினென் 1 தொல் - செய்யுளியல் 49-ஆம் சூத்திர ம், நச்சினுர்க் கினியர் உரை. 1 சீவகசிந்தாமணி கடவுள் வாழ்த்து நச்சிஞர்க்கினியர் @一尔s。 2 தொல் - செய்யுள் - 149-ஆம் சூத்திரம். *帝

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/80&oldid=745136" இலிருந்து மீள்விக்கப்பட்டது