பக்கம்:இசைத்தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பட்டவை மற்ருெரு பாவிற்கும் இனமாம் (எனக் கொள்ளு மாறு அவற்றின் இலக்கணம் தெளிவின்றி அமைந்திருத் தலால் அவற்றை இன்ன பாவிற்கு இனமாம் என வரை யறைப்படுத்துதல் பொருந்தாதெனவும், இங்ங்ணம் இனஞ் சேர்த்தற்கு அரியனவாயினும் அவை பெரும்பான்மையும் கலிப்பாவிற்கு ஏற்ற ஓசையே பெற்று வருவன ஆதலின், ஆசிரியர் தொல்காப்பியனர் அவையெல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரங்கொடுத்துக் கொச்சகத்துள் அடக்கினரெனவும், அதுவே தொன்றுதொட்டு வந்த யாப்பியல் மரபெனவும் பேராசிரியரும் நச்சினர்க்கினியரும் தக்க காரணங்காட்டி விளக்கியுள்ளார்கள். தேவாரத் திருப்பதிகங்களின் ஓசை வேற்றுமையும் சீர்கள் மிக்கும் குறைந்தும் வருதலும் ஆகிய இவ்வியல்புகள் கலிப்பாவிற்கே யேற்றனவாதலின் இத்திருப்பதிகப் பாடல் களைக் கலிப்பாவின் வகையென்று அடக்குதலே இவற்றை அருளிச்செய்த பெரியோர்களின் கருத்தாகும். தேவார ஆசிரியர் மூவருள் ஒருவராகிய ஆளுடைய பிள்ளையார், தாம் பாடியருளிய சந்தப் பாடல்களையெல்லாம் இயற் றமிழில் கலிப்பாவின் வகையுள் அடக்கி ஒதியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். அந்தண் பூங் கச்சி யேகம்பனே யம்மானே க் கந்தண் பூங் காழியூரன் கலிக்கோவையால் சந்தமே பாடவல்லதமிழ் ஞானசம் பந்தன்சொற் பாடியாடக்கெடும் பாவமே. என ஞானசம்பந்தப் பிள்ளையார் பாடிய திருக்கடைக் காப்புப் பாடல், 'கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்" என அவரைச் சிறப்பித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/82&oldid=745138" இலிருந்து மீள்விக்கப்பட்டது