பக்கம்:இசைத்தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 இது, தனன தானளு' என ஆறெழுத்தால் அமைந்த அடிகளையுடையதாகும். மணியர் முதுகுன்றைப் பணிவா ரவர்கண்டிர் பிணியா யினகெட்டுந் தணிவா ருலகில்ே. இது, 'தனஞ தனதான என்னும் ஏழெழுத்தாலாகிய அடி களையுடையதாகும் திருஞானசம்பந்தர் அருளிய இத்திருப் பாடல்கள் இருக்கு எனப் போற்றப்பெறும் வேத மந்திரங் களைப் போன்று இறைவனைப் போற்றும் மறைமொழிகளாய மந்திரங்களாய் அமைந்தமையால், பொருளமைதி பற்றி "இருக்கு என்ற பெயரும், இருசீரடியாகிய குறளடிகளால் இயன்றமையால், யாப்பமைதி பற்றிக் குறள் என்ற பெயரும் பெறத்தக்கனவாதலின், இவ்விரு பெயர்களும் ஒருங் கியையப் பெற்றுத் திரு இருக்குக்குறள் என வழங்கப் பெறுவனவாயின. இனி எழுத்தின் மாத்திரையே யன்றி அவற்றின் வன்மை, மென்மை, இடைமையாகிய ஓசையமைதியினைக் குறிக்கும் முறையில் தத்த, தந்த, தய்ய என முறையே வல்லொற்று, மெல்லொற்று, இடையொற்றுப் பெற்று இவ்வாறு முவேறு வாய்பாடுகளாக வழங்கும் வண்ணச் சொற்களும் உள. வண்ணப் பாடல்களில் வழங்கும் தத்த தந்த, தய்ய என்னும் இவை மூன்றும் சந்தப் பாக்களில் வரும் தான' என்பதும் ஒரே மாத்திரையள வினவாம். ஒரு குரு நின்ற இடத்தில் இரண்டு லகு நிற் றலும் சந்தப் பாடல்களுக்குப் பொருந்தும். அஃதாவது 'தான' என்னும் சந்தக் குழிப்பு ஒரோவழி 'தனன' என வருதலும் சந்தப்பாவுக்கு ஏற்கும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/86&oldid=745142" இலிருந்து மீள்விக்கப்பட்டது