பக்கம்:இசைத்தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மேற்காட்டிய சந்த விகற்பங்களுக்கும் வண்ண விகற் பங்களுக்கும் ஏற்ற சந்தக் குழிப்பு வாய்பாடுகள் பல தேவார காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் வழங்கி வந்துள்ளன. ‘தென்ன வென்று பரிவண்டிசைசெய் திருவாஞ்சியம்’ 2-7-1 ‘தென்னென வண்டினங்கள் செறியார் பொழில் 1-195-10 "தென்னென இசைமுரல் சரிதையர்' 3-85.3 "தெத்தென இசைமுரல் சரிதையர்' 3–85-3 'தும்பி தெத்தே யெனமுரல’ 2-72-5 எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத்தொடர்களும் "தேத்தெத்தா வென்னக் கேட்டார்’ 4-32-10 எனவரும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரும், ‘தென்னுத் தெனத் தெத்த ைவென்று பாடி’ 7 3-6 எனவரும் சுந்தரர் தேவாரத் தொடரும் முறையே தென்ன, தென்னென, தெத்தென, தெத்தே, தேத்தெத்தா, தென்ன தெளு, தெத்தென என்னும் இசைக்குரிய அசைச் சொற் களே எடுத்து ஆண்டுள்ளன. இவ்வாறே .தந்த திந்தத் தடமென் றருவித்திரள் பாய்ந்து போய் 2.5.4 எனவும், "தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடும்’ எனவும் வரும் தொடர்களில், தந்த திந்த, தேம், தாம் என ஆடற்குரிய சதிச் சொற்கள் சிலவற்றை ஆளுடைய பிள்ளையார் குறித்துள்ளார். பிள்ளையார் அருளிய பந்தத்தால், எனத் தொடங்கும் திருத்தாளச் சதித் திருப்பதிகம், இசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/87&oldid=745143" இலிருந்து மீள்விக்கப்பட்டது