பக்கம்:இசைத்தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 எழுத்தளவு பற்றி இசைப்பாக்களின் அமைப்பினைப் பகுத் துணர்தல் வேண்டும். இங்ஙனம் இசைப்பாக்களின் சந்த அமைப்பினை அறிதற்குரிய கருவியாகத் தான, தன, தானு, தன முதலாக உள்ள அசைச்சொற்கள் இசைத் தமிழ்ப் பாடல்களுக்குரிய சந்தக் குழிப்புச் சொற்களாக இசை யாசிரியர்களால் எடுத்தாளப் பெற்றுள்ளன. முருகப் பெரு மானது பொருள்சேர் புகழினைச் சந்தமலிந்த செந்தமிழ்ப் பாடல்களாற் பரவிப் போற்றிய அருணகிரிநாதர், தாம் பாடிய திருப்புகழ்ப் பாடல்களின் இயலமைப்பினையும் இசை யமைப்பினையும் பின்னுள்ளோர் எளிதின் உணர்ந்து பாடுதற்கு ஏற்ற-வண்ணம் தானு, தனு, தனனு முதலிய இசைக்குரிய அசைச்சொற்களேத் தம் பாடல்களில் ஆங்காங்கு இயைத் துப் பாடியுள்ளார். அவ் ஆசிரியர்க்கு இசைநெறி காட்டிய மூல இலக்கியங்கள் மூவர் முதலிகள் திருவாய்மலர்ந் தருளிய தேவாரத் திருப்பதிகங்களாகும். எனவே தேவாரப் பதிகங்களுக்குரிய யாப்பமைதியினையும் நெடில் குறில் என அமைந்த எழுத்துக்களின் மாத்திரையளவினையும் கருத்திற் கொண்டு தான, தன, தான, தன முதலியவற்றை வாய் பாடுகளாக வைத்து எழுத்தெண்ணி அடிவகுக்கு முகமாக அவற்றின் கட்டளைகளைப் பிரித்தறிதல் இயல்வதாகும். திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, திரு வெகுக் கத்தம் புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற் பிறந்த இசைச் செல்வியாராகிய பாடினியார் ஒருவரைக் கொண்டு மூவர் தேவாரப் பதிகங்களுக்கும் இசையமைத்தார் என் பதும், அவ்வாறு அமைந்த இசைமுறையில் இன்ன இன்ன பண்களுக்குரிய பதிகங்கள் இத்தனை இத்தனை கட்டளை யுடையன என்பதும் திருமுறை கண்ட புராணத்தில் தெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/90&oldid=745147" இலிருந்து மீள்விக்கப்பட்டது