பக்கம்:இசைத்தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முறைப்படுத்தினமையால் திருமுறைகண்ட சோழன் எனப் போற்றப்பெற்ருன் என்பது வரலாறு. அவ்வேந்தன், திருவெருக்கத்தம்புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற் பிறந்து இசைத்துறையில் வல்ல பாடினியா ரொருவரைக்கொண்டு தேவாரத் திருப்பதிகங்களுக்குரிய பழைய பண்முறைகளை அடியொற்றி இசை வகுக்கச் செய்தனன். அங்ங்ணம் வகுக்கப் பெற்ற தேவாரப் பண் முறை கி. பி. பதின்முன்ரும் நூற்ருண்டு வரை தமிழ் நாட்டில் சிறப்பாக நிலைபெற்று வழங்கியது. கி. பி. 1210. 1241-ல் வடநாட்டில் தெளலதாபாத் தேவகிரிராச்சியத்தில் சிம்மண ராச சபையில் அவைக்களப் புலவராக விளங்கி யவர் சாரங்கதேவர். இவர் தமிழ்நாட்டில் யாத்திரை செய்து இங்கு வழங்கும் தேவாரப் பண்களை நன்குணர்ந் தவர். இவர் தாம் இயற்றிய சங்கீத ரத்தனுகரம் என்னும் இசைநூலில் தேவாரப் பண்கள் சிலவற்றின் இலக்கணங் களைப் பொன்னேபோல் போற்றி வைத்துள்ளார். தக்க ராகத்தின் விபாஷையாகிய தேவாரவர்த்தநீ என்றும், மாளவ கைசிகமாகிய தேவார வர்த்தநீ என்றும் தக்க ராகம், கெளசிகம் ஆகிய தேவாரப்பண் களை இவர் முறையே குறித்துள்ளமை காணலாம். எனவே தேவாரத் திருப்பதிகங்களை முன்னேர் வகுத்த பண் முறைப்படி இக்காலத்திலும் பாடிக்கேட்டு மகிழ்தற்குரிய வழி முறை களே ஆராய்ந்து மேற்கொள்ளுதற்குச் சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்தளுகரம் பெரிதும் துணைபுரியுமெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். தேவாரப் பதிகங்களுக்குப் பண்வகுத்த காலத்து இசை முறையும் சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்தகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/93&oldid=745150" இலிருந்து மீள்விக்கப்பட்டது