பக்கம்:இசைத்தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? கரத்திற் கூறப்பட்ட தேவாரப் பண்களின் இசைமுறையும் இடைக்காலத்து இசைமரபு எனப்படும். இவ்விசைமரபு கி. பி. 16-ஆம் நூற்ருண்டுவரை தமிழ்நாட்டில் அழி வெய்தாதிருந்தது. பின்பு தஞ்சையில் மகாராட்டிர ஆட்சியில் ஏற்பட்ட பிறநாட்டு இசைக்கலப்பிலுைம் பிறமொழி யிசைப்பாடல்களைப் பாடும் பழக்கம் இசைவாணர்யால் பெருக நிலைபெற்றமையாலும் இசைத் தமிழ்ப் பனுவல் களாகிய தேவாரத் திருப்பதிகங்களை அவற்றிற்குரிய பண் முறையிற் பாடும் முறை மறந்து பழைய தமிழ்ப் பண்ணுரு வங்கள் சிதைந்து மறையும் நிலையையெய்தின. எனவே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்களை அவற்றுக்குரிய பண் களிற் பாடும் தலைமுறையினராகிய இசையாளர் அருகினர் எனினும் திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் பணிபுரிந்த ஒதுவார்கள் சிலர், இன்ன இன்ன பண்ணமைந்த பதிகங் களே இன்ன இன்ன இராகங்களிற் பாடுதல் வேண்டும் எனத் தமக்குள் ஒருவரையறை செய்துகொண்டனர் எனத் தெரிகிறது. தேவாரத்திற் பயின்ற பண்களைப் பகற்பண், இராப்பண், பொதுப்பண் என மூவகையாகப் பகுத்து, அவை முறையே இன்ன இன்ன நேரங்களிற் பாடுதற் குரியன என்பதும், இன்ன இன்ன பண்ணமைந்த பதிகங்களை இக்காலத்தில், வழங்கும் இன்ன இன்ன இராகங்களிற் பாடுதல்வேண்டும் என்பதும் ஆகிய தேவாரப் பண்முறைக் குறிப்பொன்று திருவாவடுதுறை யாதீனத்திலுள்ள ஏட்டுப் பிரதியொன்றில் இருப்பதாக ஆசிரியப் பெருந்தகை பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/94&oldid=745151" இலிருந்து மீள்விக்கப்பட்டது