பக்கம்:இசைத்தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9s; சதுர்தண்டிப் பிரகாசிகையிலே காணப்படுவனவும் பிற் காலத்தில் வழக்கொழிந்தனவுமாகிய இராகங்கள் சில குறிக்கப்பெற்றுள்ளன. இதிற்குறித்த இச்சிச்சி என்பது, ஹெஜ்ஜுஜ்ஜி என்ற இராகத்தையும், நெளித பஞ்சமி என்பது லளித பஞ்சமத்தையும் குறிப்பன. எழுபத்திரண்டு மேளகர்த்த ராகங்களே வகுத்துக் காட்டியவர் வேங்கடமகி. அவர் தந்தையார் கோவிந்த தீட்சிதர். அவர் தஞ்சையில் கி.பி. 1572 முதல் 1614 வரை ஆட்சி புரிந்த அச்சுதப்ப நாயக்கருக்கு அமைச்சராயிருந்தவர். அவருடைய புதல்வர் வேங்கடமகி காலத்திற்குப்பின் தோன்றிய இப்பண்ணடைவு ஏறக்குறைய முந்நூருண்டுகள் தொன்மையுடையதெனக் கொள்ளலாம் இப்பண்ணடைவினைக் குறித்த திருவாவடு துறையாதீன ஏட்டுப் பிரதியில் கொல்லம் 917-u துன்முகி-இடு மாசிமீ ச.வ எழுதி முடிந்தது' என எழுதப் பெற்றிருத்தல் இதனை வலியுறுத்தும். இனி. மேலே குறித்த முறையிலன்றிச் சில பண்களே வெவ்வேறு இராகங்களிற் பாடும் மரபொன்றும் தேவார ஒதுவார்களிடையே நிலவி வந்துளது. புறநீர்மையைப் பூபாளத்திலும், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கொல்லி, கொல்லிக் கெளவாணம் என்ற பண்களை நவ ரோசிலும், இந்தளம் திருக்குறுந்தொகைப் பதிகங்களை நாதநாமக்கிரியையிலும், நட்டபாடையை நாட்டையிலும், தக்க ராகத்தைக் காம்போதியிலும், குறிஞ்சியை அரிகாம் போதி யதுகுல காம்போதி கலப்பிலும், அந்தாளிக் குறிஞ்சியைச் சாமா ராகத்திலும், திருத்தாண்டகத்தை அரிகாம்போகியிலும் பாடும் வழக்கம் நிலைபெற்றிருத்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/97&oldid=745154" இலிருந்து மீள்விக்கப்பட்டது