பக்கம்:இசைத்தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அடியொற்றி ஒதுவார்கள் பாடிவந்தனர். எனினும் பிற்காலத்தில் சைவ ஆதினங்களிடையே நிலை பெற்று வழங்கிய பழக்கங் காரணமாகவும் இசைத்துறையில் மிகவும் தேர்ச்சிபெற்ற ஒதுவார்கள் சிலர் தமது இசைத் திறம் விளங்கப் புதியனவாக அமைத்துப் பாடிய இசையமைப்புக் காரணமாகவும் மேற்குறித்த பண்களுள் ஒரு சிலவற்றிற்குரிய இராகங்கள் வேறுபட்டன என எண்ணவேண்டியுளது தேவாரப் பண்களில் பகற்பண், இராப்பண் என்ற பகுப்புமுறை பழைய பண்முறையினை அடியெபற்றி அமைந் திருத்தல் வேண்டும். தேவார ஆசிரியர்கள் தலங்கள் தோறும் இறைவனே வழிபடச் சென்றபொழுது அவ்வக்கால நிலைக்குச் சிறப்புரிமையுடைய பண்களிலும் திருப்பதிகங்களை அருளிச் செயதுள்ளார்கள். திருஞான சம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து பாண்டிநாட்டிற்கு எழுந்தருளி மதுரை யெல்லையில் நின்று திருவாலவாய்த் திருக்கோபுரத்தைக் கண்டு கைதொழுது போற்றிய நேரம் விடியற்காலமே என்பது பெரிய புராணத்தால் இனிது புலம்ை. விடியற் காலமாகிய பொழுதுக்குப் பொருந்த அப்பொழுது பிள்ளையார் அருளிய திருப்பதிகம் மங்கையர்க்கரசி என்னும் முதற்குறிப்புடைய புறநீர்மைப் பதிகமாகும். புறநீர்மை (பூபாளம்) என்றபண், பள்ளியெழுச்சிக்குரிய விடியற் காலத்திற் பாடத்தக்கதென்பது, " பாண் வாய் வண்டு நேர்திறம்பாடக் காண்வரு குவளே கண்மலர் விழிப்ப ’ [அந்திமாலே - 75, 16) என வரும் சிலப்பதிகாரத் தொடராலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/99&oldid=745156" இலிருந்து மீள்விக்கப்பட்டது