பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி உயர்திரு. முசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்கள் இசைமணிமாலை என்ற தொகுப்புக்கு அளித்துள்ள முகவுரையில் சில பகுதிகள் பூரீ பெரியசாமித்துாரன் முருகப் பெருமானிடத்தில் மாருத பக்தி கொண்டவர். அதன் காரணமாக அவர் கடவுளை வழிபடுகின்றபோதும் மற்ற சக்தர்ப்பங்களிலும் பல இனிய கீர்த்தனைகளைப் பாடியிருக்கிருர். இசையோடு சேர்த்துப் பாடப்பெறும் சாகித்யங்கள் எல்லாம் எளிய சொற்களால் அமைந்திருந்தால்தான் அவற்றைக் கேட்பவர்கள் சுலபமாக உணர்ந்து ரசிக்க முடியும். பூநீ தூரன் தமது பாடல்களில் எளிய சொற் களையே கையாண்டிருப்பது வெகுவாகப் போற்றத் தகுந்தது. பூநீ சிவராமகிருஷ்ணய்யர், தூரன் அவர்களுடைய சங்கீத குரு. அவர் பல ஆண்டுகளாகத் துரனுடன் கட்டவேயிருந்து வந்திருக்கிருர். புதிய பாடல்களை இயற்றி அளிக்கும் பூரீ பெரிய சாமித் துரனுக்கு சங்கீத உலகம் கடமைப்பட்டிருக்கி றது. அவருடைய தெய்வ பக்தியும், ஒழுக்க சீலமுமே இம்மாதிரியான பாடல்களே உண்டாக்கும் திறமையை அளித்திருக்கின்றன என்று கூறினுல் அது மிகை யாகாது. அவர் பல துறைகளிலே தமிழ் இலக்கியத்திற் குச் சேவை புரிந்து வருவதை அனைவரும் அறிந்திருக் கிருர்கள். சங்கீதத் துறையிலே அவர் முன்பே 150 பாடல்கள் கொண்ட இரண்டு தொகுதிகள் வெளியிட் டிருக்கிருர். இது மூன்ருவது தொகுதியாகும். அவ ருடைய சேவையை நான் மிகவும் பாராட்டுகிறேன். இப்பாடல்களை இசையுலகம், முருகனுடைய திருவரு ளால் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் என்று நிச்சயமாய் கம்புகிறேன். 25-11-1949 முசிரி சுப்பிரமணிய ஐயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/4&oldid=745289" இலிருந்து மீள்விக்கப்பட்டது