பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பேராசிரியர் உயர்திரு. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கீர்த்தனை மஞ்சரி என்ற தொகுதிக்கு அளித்த முகவுரையில் ஒரு பகுதி ஹு தூரனின் சாஹித்யங்களில் உயர்தர சங்கீதத் துக்குரிய சிறந்த பண்புகள் எல்லாம் அமைந்திருக்கின்றன. சாஹித்யங்களில் அவர் கையாளும் தமிழ் எளிதாயும் இனிதாயும் இருக்கிறது. உணர்ச்சி ததும் பிக் கவிதா சந்ததம் பொருந்தியிருக்கிறது. நம் முன்னோர்கள் கையாண்டு பண்பட்ட பாணியில் ஹீ தூரன் சாஹித்யங்களை அமைக்கிருர். தற்காலத்து மக்கள் அறிந்து அனுபவிக்கக்கூடிய புதிய கருத்துக்களே வைத்து அமைக்கிறனர். சங்கீத வித்வான்கள் அடுக் கடுக்காகச் சங்கதிகளைப் பொழிந்து பாடக்கூடியவாறு பல்லவி, அனுபல்லவி, சரணங்களை அமைக்கிருர். ஹீ தூரன் ஒரு கவிஞர். அவருடைய இருதயம் தூய்மையானது. இசைமயமானது. ஆகையால் பாடல்களில் இயற்கையாகவே தமிழ் வளமும் இசையும் ஊடுருவிகின்றன. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரப் போகும் சங்கீத வித்வான்களும், மாணவர்களும், மாணவிகளும் ஹீ பெரியசாமித்துாரன் அவர்களின் சாஹித்யங்களைப் பாடுவதையும் பதியிைரக்கணக்கான தமிழ் மக்கள் கேட்டு மகிழ்வதையும் மனக் கண்ணுல் கண்டுகளிக்கிறேன். ரா. கிருஷ்ணமூர்த்தி 1951 ஆசிரியர், கல்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/5&oldid=1534057" இலிருந்து மீள்விக்கப்பட்டது