பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி உயர்திரு. செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் இந்நூலுக்கு வழங்கிய முகவுரை தெய்விகக் கலையான இசையால் ஆண்டவனது புகழைப் பாடி அவனது அருளைப் பெற்று, அவன் திரு வடித் தாமரைகளே அடைந்துள்ள மஹான்கள் பலபேர் நம் நாட்டில் தோன்றியுள்ளார்கள். கருனட சங்கீதத் திற்கு சட்டதிட்டம் அமைத்து, அது என்றும் வழி முறை மாருமல் தூய்மையுடன் விளங்கச் செய்த பெரி யோர்கள் அவர்கள்தான். அவர்களில் நீ தியாகப்பிரம்மம், நீ முத்துஸ்வாமி தீட்சிதர், நீ சியாமா சாஸ்திரிகள் என்ற மும்மூர்த்தி களும் நமது இசைக்கலை என்றும் உருமாருமல் புனி தத் தன்மையோடு திகழ வழி வகுத்தவர்களாவர். இராகங்களை லக்ஷண யுக்தமாகவும், இசைக் கட்டடங்க ளாகவும் அவரவர்கள் இஷ்டதெய்வங்களே சாகித்ய ரூப மாக்ப் பாடி நமது சங்கீதம் என்றும் அழியாத பொக் கிஷமாக இருக்க அருளியுள்ளார்கள். இம் மூவரிலும் தீட்சிதர் அவர்கள்தான் நமது காட்டிலுள்ள ஒவ்வொரு கூேடித்திரத்திலும் கோவில் கொண்டிருக்கும் எல்லா தெய்வங்களையும் போற்றிப் பாடியவராவார்கள். அம்மஹான்களின் வழிவழியாகசாகித்ய கர்த்தாக் கள் பலர் தோன்றி இசைக் கலையையும், தெய்வ பக்தி யையும் பரப்பினர்கள். - இம்முறையில் நமது திரு. ம. ப.பெரியசாமித்துாரன் அவர்கள் மேற்சொன்ன மஹான்களின் வழியைப் பின் பற்றி தமது இஷ்டதெய்வமான முருகப் பெருமானையும், மற்றும் பல பெயர்களால் வழிபடப்படும் இறைவனைப் பேத்மில்லாமலும், இன்னிசையுடன் இனிய தமிழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/6&oldid=745311" இலிருந்து மீள்விக்கப்பட்டது