பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியன் முன்னுரை பச்சைக் குழந்தைப் பருவத்தே வந்தென்னை இச்சைக் குகந்தவளுய் ஏற்றருளித் தான்வளர்த்த மெச்சிப் புகழ்பழகி வேலப்பா உன்பதமென் உச்சித் தலைவைத்தே உலகத் திருப்பேனே. இறைவனை கினைந்து பாடுவதால் வரும் இன்பத் தைப் பற்றி வள்ளால் உன்னைப் பாடப்பாட வாய் மணக்குதே ' என்று இராமலிங்க வள்ளலார் உள்ள முருகிப் பாட்டாலேயே எடுத்து ஒதுகிருர், இறைவனை கினைப்பதே இன்பம்; அவன் புகழைப் பேசுவதே இன்பம்; அவன் பெருமையைக் கேட்பதே இன்பம். இசையோடு கலந்து தீந்தமிழிலே இறைவனைப் பாடுவ தென்ருல் அதுவே பேரின்பம். பக்தி செய்வதால் வீட்டின்பம் பெறலாம் என்று ஆன்ருேர்கள் கடறியுள்ளார்கள். வீட்டின்பம் மட்டுமல்ல, உலக இன்பங்களுக்கும் அது சாதகமாக இருக்கின்றது. வாழ்க்கையைச் சீரிய முறையிலே அமைத்துக் கொள் வதற்கு அது பேருதவி புரிகின்றது. இதைவிடப் பெரிய தார் நன்மை வேறு என்ன இருக்கினறது? பக்தியினல் உள்ளம் தூய்மையடைகிறது; உயர்ந்து மேலெழு கிறது. இறைவனுடைய திருவடிகளைச் சிக்கெனப் பிடிக்கவும் அது உதவுகிறது. இறைவன் எல்லா உயிர்களிலும் விளங்குகிருன் ; எங்கும் நிறைந்திருக்கிருன். அவனுக்கு ஒரு காமம் இல்லை : ஒருருவம் இல்லை. ஆனல் ' ஒரு காமம் ஒருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம்” பாடு வது அடியார்களின் அன்புப் பெருக்கு. அவனை சிவன் என்று கடறலாம்; விஷ்ணு எனலாம்; முருகன் எனலாம். பராசக்தி எனலாம் ; பரம்பொருள் எனலாம். யாருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/9&oldid=745344" இலிருந்து மீள்விக்கப்பட்டது