பக்கம்:இசையமுது 1, 1984.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் பகுதி தபால்காரன் வருகின்றார் தபால்காரர்—கடிதம் தருகின்றாரோ இல்லையோ- வருகின்றார் தபால்காரர்! தருகின்றார் கடிதம் எனினும் அது எனக் குரியதோ என் தந்தைக் குரியதோ! வருகின்றார் தபால்காரர் வரும் அக் கடிதம் அவர் வரைந்ததோ மாமியார் வரைந்ததோ திருமணாளர் வரைந்த தாயினும் வருவதாய் இருக்குமோ இராதோ! வருகின்றார் தபால்காரா! அன்பர் அவர் வருவ தாயினும் ஆடி போக்கியோ, விரைவிலோ இன்று போதல்நூ றாண்டு போதலே அன்றி நாளைஎன் பதுவென் சாதலே வருகின்றார் தபால்காரர்! 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/16&oldid=1443334" இலிருந்து மீள்விக்கப்பட்டது