பக்கம்:இசையமுது 1, 1984.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பகுதி அன்பு அன்பை வளர்த்திடுவாய்-மெய் யன்பை வளர்த்திடுவாய்! கூடப்பிறந்த குழந்தை யிடத்தினில் கொஞ்சுதல் அன்பாலே! உற வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும் அன்பின் திறத்தாலே! தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு சின்னவ னுக்குத் தர-நீ ஓடுவதுண்டெனில் கண்டிருப்பாய் உன் உள்ளத் திருந்த அன்பை! கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது கருதில் அன்பன்றோ? உன்னையும் உன்னரும் தோழர்கள் தன்மையும் ஒட்டிய தன்பன்றோ? சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும் சிட்டுப் பறந்ததுபோல்-நீ முன்னுற ஓட உன் உள்ளம் பறந்ததும் முற்றிலும் அன்பன்றோ? 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/22&oldid=1443337" இலிருந்து மீள்விக்கப்பட்டது