பக்கம்:இசையமுது 1, 1984.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சீட்டு இத்தனைச் சிறிய சிட்டு!—நீ பார்! எத்தனை சுறுசுறுப்பு!- தம்பி இத்தனைச் சிறிய சிட்டு! குத்தின நெல்லைத் தின்று நம் வீட்டுக் கூரையில் குந்தி நடத்திடும் பாட்டு இத்தனைச் சிறிய சிட்டு! கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு! கொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும் கூட்டை நீ கலைத் தாலது திட்டும் இத்தனைச் சிறிய சிட்டு! இசையமுது மல்லி பிளந்தது போன்ற தன் கண்ணை வளைத்துப் பார்த்த ளாவிடும் விண்ணைக் கொல்லையில் தன்பெட்டை அண்டையில் செல்லும் குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும் இத்தனைச் சிறிய சிட்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/29&oldid=1443344" இலிருந்து மீள்விக்கப்பட்டது